கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏப்ரல் 14 வரை அமலில் உள்ள இந்த உத்தரவால் நாடு முழுவதிலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன.
இன்று கிறிஸ்தவ மக்களின் புனித பண்டிகையான புனித வெள்ளி நாளாகும். இந்த நாளில் திரளான மக்கள் தேவாலயங்களில் கூடி பிரார்த்தனை செய்வது வழக்கம். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தேவாலயங்கள் ஆள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.