காவிரி வழக்கில் கால அவகாசம் கேட்டு மனு: மத்திய அரசின் முடிவில் திடீர் மாற்றம்

வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (21:28 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் அந்த தீர்ப்பில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் மே மாதம் 3ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அன்றைய தினம் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று மத்திய அரசு திடீரென காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கோரிய மனுதாக்கல் செய்தது. இந்த மனுவால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மேலும் காலந்தாழ்த்துவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின
 
இந்த நிலையில் காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கோரிய மனுவை மத்திய அரசு வாபஸ் திடீரென பெற்றது. மத்திய அரசின் வழக்கறிஞர் அறிவுரையால் இந்த மனு வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்