இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. அதனால் அவர் தற்கொலை செய்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பொதுவாக புழல் சிறையில் உள்ள அனைத்து அறைகளும், சிசிடிவி கேமராவின் கண்காணிப்பில் இருக்கும். அப்படியே பழுதடைந்தாலும், அது ஏன் சரி செய்யப்படவில்லை?.. அல்லது இதில் ஏதாவது காரணங்கள் ஒளிந்துள்ளனவா? என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.