கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மூதாட்டி நேற்றிரவு மரணம் அடைந்தார். அவரது உடலை யாரும் வாங்க வராததால் மருத்துவமனை ஊழியர்கள் பிணவறையில் பாதுகாத்து வைக்காமல், வார்டிலேயே வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு பூனை அந்த மூதாட்டியின் உடலை கடித்து தின்ற அதிர்ச்சி காட்சியை கண்ட சில இளைஞர்கள் இதுகுறித்து மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் சிகிச்சை அளிப்பது மட்டுமே தங்களுடைய வேலை என்றும், பிணத்தை பாதுகாக்கும் பணி எங்களுடையது இல்லை என்றும் ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்த மூதாட்டியின் உடலை பூனை கடிக்கவில்லை என்றும், இறந்தவரின் உடலை பூனை கடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு என்றும் மருத்துவமனையின் டீன் அகோகன் விளக்கம் அளித்துள்ளார்.