இந்நிலையில் நாங்குநேரி பகுதிகளில் சட்டவிரோதமாக ஓட்டுக்கு பணம் அளிக்கப்படுவதாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆதாரம் இல்லாததால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட அம்பலம் பகுதியில் ஒரு வீட்டில் ஓட்டுக்கு கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்தது.
இதை அறிந்ததும் அங்கு விரைந்த பொதுமக்கள் பணம் இருப்பதை கண்டுபிடித்ததோடு அதிகாரிகளுக்கு தகவலும் கொடுத்தனர். உடனடியாக விரைந்த அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, இவற்றை பதுக்கி வைத்திருந்தது யார் என்பது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த இந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.