மதுரை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு !

புதன், 8 மே 2019 (10:59 IST)
மதுரை தொகுதி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்யவேண்டுமென கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மதுரைத் தொகுதிப் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் நாளன்று சித்திரைத் திருவிழா இருப்பதால் தேர்தலை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதைத் தேர்தல் ஆணையம் மறுக்க தேர்தல் நேரம் அதிகமாக்கப்பட்டது.

தேர்தல் முடிந்தபின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்று நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போது துரை நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஆவார். அவரது மனுவில் ‘வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதனால் மதுரைத் தொகுதி தேர்தலை தடை செய்யவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்