பிரேமலதாவின் இந்த செயல் குறித்து தேமுதிக தொண்டர்கள் தங்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். கேப்டனின் ட்விட்டர் கணக்கை அப்படியே வைத்திருக்கலாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தனக்கென தனியாக ஒரு கணக்கை ஆரம்பித்திருக்கலாம் என்றும் கேப்டனின் ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டு அவரது பெயரில் இருந்த கணக்கை தனது பெயருக்கு மாற்றி உள்ளது சரியல்ல என்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்