திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள பொட்டியம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள், தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து, 3.1/2-கிலோ எடை உள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் உடுமலை, குடிமங்கலம், தாராபுரம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் மட்டைமில், செங்கல்சூளை, நூல்மில், பனியன் கம்பெனி போன்றவற்றில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்களுக்கு கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார்.