வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போடலாமா? – இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்..!

Prasanth Karthick

ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (10:51 IST)
மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 வகையான ஆவணங்களில் ஒன்றை சான்றாக காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பூத் சிலிப் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்பதற்காக வாக்கு செலுத்த சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி வாக்காளர் அடையாள அட்டையில் சிறு எழுத்து பிழைகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாது வாக்காளர்கள் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்தில் மாற்றம் இருந்தால், சம்பந்தப்பட்ட புகைப்பட ஆவணத்தைக் காட்ட வேண்டும்.

ALSO READ: சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவின் முதல் பிரதமர்.. நான் சொன்னது சரிதான்: கங்கனா ரனாவத்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் அட்டை, வங்கி பாஸ்புக், ஓட்டுனர் லைசென்ஸ், பாஸ்போர்ட், பென்ஷன் ஆவணம், மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை, எம்பி, எம் எல் ஏ அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்