நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் : ஊரடங்கை நீட்டிப்பது பற்றி ஆலோசனை !
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (14:19 IST)
சீனாவில் இருந்து இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. இதைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்றால் இதுவரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 834 பேரில் 700க்கும் மேற்பட்டவர்கள்டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தகவல் வெளியாகிறது.
இந்நிலையில், நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. இதில், ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.