மதுபோதையில் காரை தொழிலாளி மீது ஏற்றி கொன்ற தொழிலதிபர் மகள்

சனி, 2 ஜூலை 2016 (14:52 IST)
சென்னை தரமணியில் குடிபோதையில் கார் ஓட்டி வந்து மோதியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, தொழிலதிபர் மகள் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் முனுசாமி (45). முனுசாமி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தனது நண்பர் சரவணனுடன் வேலைக்கு சென்றுள்ளார். தரமணி அருகே ராஜீவ்காந்தி சாலையை கடக்க முனுசாமி முயற்சி செய்துள்ளார்.
 
அப்போது அங்கு வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று முனுசாமியின் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவருடன் சென்ற நண்பர் சரவணன் அலறி கத்தியுள்ளார்.
 
சரவணனின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த ஒருவர், தனது பைக்கில் காரை துரத்திப் பிடித்தார். காரில் மூன்று பெண்கள் இருப்பது தெரியவந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை காரில் இருந்து வெளியே இழுத்தபோது தான் அவர்கள் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.
 
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூன்று பேரையும் விசாரித்தனர். அப்போது, விலையுயர்ந்த காரை ஓட்டி வந்தது, ஐஸ்வர்யா என்பதும் அவர் தொழில் அதிபரின் மகள் என்று கூறப்படுகிறது. அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்