சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் சென்ற போது, முன்னால் பெண்ணாடத்தில் இருந்து தேனி நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், திடீரென லாரியின் பின்புறம், அரசு பஸ் மோதி, நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இதில் பயணிகள் 22 பேர் படுகாயமடைந்தனர்.