பள்ளிகளில் காலை உணவு திட்டம் ...மாணவர்கள் மகிழ்ச்சி...

திங்கள், 25 பிப்ரவரி 2019 (12:14 IST)
தமிழகத்தில் கல்விக்கண் திறந்த காமராஜர் ஏழைக் குழந்தைகளின் கல்வி எந்த விதந்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
அதை இன்னும் மெருகேற்றி அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டமாக மாற்றினார். அது இன்றும், வெற்றிகரமான திட்டமாக இருந்து பல மாணவர்களின் பசியை ஆற்றி வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். திருவான்மியூர் அரசுப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனம் சென்னை மாநகராட்சி இணைந்து இந்த காலை உணவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
 
 தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் என்று  தமிழக  அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்