இன்று காலை முதல் காவல்துறையினர் பரபரப்பாக இருந்ததற்கு காரணம் ஈரோடு மற்றும் தூத்துக்குடி ரயில்வே நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக வந்த மிரட்டல் போன் கால் தான். இந்த போன்காலை அடுத்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சுறுசுறுப்பு அடைந்து இரண்டு ரயில்வே நிலையங்களிலும் அதிரடியாக சோதனையிட்டனர்
பல மணி நேர சோதனைக்குப் பின்னர் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்பதால் மிரட்டல் கால் புரளி என்பது உறு திசெய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மிரட்டல் அழைப்பு எந்த எண்ணிலிருந்து வந்தது என்பதை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ததில், லிங்கராஜ் என்பவரது பெயரில் அந்த சிம் இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து அவரிடம் நடத்திய விசாரணையி, இந்த சிம் பல நாட்களுக்கு முன்பே தொலைந்து விட்டதாகவும் தற்போது அவர் வேறு சிம் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து மேலும் தீவிர விசாரணை செய்தபோது சந்தோஷ் என்ற இளைஞர் தான் இந்த மிரட்டல் அழைப்பை விடுத்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தபோது ’தான் ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்ததாகவும், அந்த மில்லில் தினமும் 10 மணி நேரம் அதிகமாக வேலை வாங்கி குறைவான சம்பளம் கொடுப்பதாகவும், அதனால் தன்னால் அந்த வேலையை செய்ய முடியவில்லை என்றும் கூறினார்
மேலும் தன்னுடைய நண்பர்கள் சிறையில் இருந்து வந்து, சிறையில் மூன்று வேளை நல்ல சாப்பாடு போடுவதாகவும் வெளியே கஷ்டப்பட்டு வேலை செய்வதை விட சிறையில் சுகமாக வாழலாம் என்றும் தெரிவித்ததாகவும் இதனை அடுத்து சிறையில் மூன்று வேளை சாப்பிட்டு சுகமாக வாழ முடிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்