NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்கும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

Sinoj

திங்கள், 25 மார்ச் 2024 (16:05 IST)
தமிழ்நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்கப் போகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 
 
டெல்லி ஜவஜர்லால் நேரு யுனிவர்சிட்டி(Jawaharlal Nehru University)ல் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தல்  கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவை  ஜே.என்.யு தேர்தல் குழு தலைவர் ஷைலேந்திர குமார் வெளியிட்டார்.
 
இதில், இடதுசாரி சார்பில் போட்டியிட்ட தனஞ்செய் 2598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட உமீஷ் சந்திரா 1676 வாக்குகாள் மட்டுமே பெற்று தோற்றார்.
 
இந்த தேர்தலோடு வரும் மக்களவை தேர்தலையும் ஒப்பிட்டு  தமிழ் நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளதாவது:
 
''டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 
 
தேர்தலுக்கு முன்பு அத்தனை வட இந்திய ஊடகங்களும் சங்க பரிவாரின் மாணவர் அமைப்பான ABVP பெரும் வெற்றியை ஈட்டும் என திட்டவட்டமாக கூறினர். வாக்கு எண்ணிக்கையின் போதும்  அப்படியே ஒரு பிம்பத்தை உருவாக்கினர். கடைசியில்  ABVP இருந்த இடமே தெரியாமல் சென்றுள்ளது. 
 
இதுதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான டிரெய்லர். ஊடகங்கள் "பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 25% வாக்குகளை பெறும்" என நிர்பந்தத்தால் மிகை படுத்தி பேசுகின்றன. ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையத்தான் போகிறது‌. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்கப் போகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்