அதிமுக அதிரடி முடிவுக்கு பாஜகவின் பதிலடி!

செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (11:34 IST)
அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக இல்லாமல் பாமகவுடன் அதிமுக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாஜக தனித்துவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
 
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே சற்றுமுன்  ஒப்பந்தம் கையெழுத்தானது* அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி பாமகவிற்கு   7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் வரும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக முழு ஆதரவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுக தங்களை கழட்டிவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாஜக, அதிமுகவுக்கு பதிலடி தரும் வகையில் இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து பியூஷ் கோயல் நாளை சென்னை வரவிருப்பதாகவும் பியூஷ்கோயல்-விஜயகாந்த் சந்திப்பு இன்று நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இருப்பினும் பாஜகவை நம்பி தேமுதிக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்றும், அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இணணய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுவதால் பாஜக தனித்துவிடப்பட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்