பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் தொடங்கியது

Siva

புதன், 19 ஜூன் 2024 (13:23 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று அக்கட்சியின் மையக்குழு கூட்டம் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
சென்னை தியாகராஜ நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயம் கட்டிடத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாகவும் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் மத்திய இணைய அமைச்சர் எல் முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், உள்ளிட்டவரும் இந்த மையக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த மைய குழு கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் சில புகார்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்வி, வாக்கு சதவீதம் அதிகரிப்பு, எதிர்காலத்தில் அமைக்கப்படும் கூட்டணி, 2024 சட்டமன்ற தேர்தலில் சந்திப்பது எப்படி போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்