இரயில் பெட்டி உணவகத்தில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டி!

J.Durai

வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (19:00 IST)
கோவை இரயில் நிலையம் அருகில் உள்ள பிரபல  போச்சே எக்ஸ்பிரஸ் எனும் இரயில் பெட்டி உணவகம் செயல்பட்டு வருகின்றது.
 
கேரளாவை சேர்ந்த பாபி நிறுவன குழுமங்களின் கீழ் செயல்படும் போச்சே ரெஸ்டாரெண்ட் விநோத போட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
 
அதன் படி ஆறு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு இலட்சம், நான்கு பிரியாணி மற்றும் மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு முறையே ஐம்பதாயிரம் மற்றும் இருபத்தி ஐந்தாயிரம் பரிசு என அறிவிப்பு செய்திருந்தனர்.
 
இந்நிலையில் காட்டுதீயாக பரவிய இந்த அறிவி்ப்பை தொடர்ந்து, கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர்.
 
இதனை தொடர்ந்து போட்டிகளை துவக்கி வைக்க பாபி செம்மனூர் வருகை தந்து போட்டியை துவக்கி வைத்தார்.
 
போட்டியில் கலந்து கொள்பவர்களில் யார் அதிகம் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்ற  டாஸ்க்குடன்,
போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ள எந்த வித   நுழைவு கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்
 
இதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும்   ஆர்வத்துடன் கலந்து கொண்டு பிரியாணியை ஒரு பிடி பிடித்தனர். 
 
ஆனால் பெரும்பாலானோர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிரியாணி சாப்பிட முடியாமல் திணறி திண்டாடினர்.
 
போட்டி குறித்து உணவகத்தின் உரிமையாளர் பாபி செம்மனூர் கூறுகையில்.....
 
இந்த போட்டியை   ஜாலிக்காக நடத்தி உள்ளதாகவும் போட்டியில் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய திறமைக்கேற்றவாறு பரிசும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 
வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 100 வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறிய அவர், அதற்கான பணிகளை அரசுடன் ஒருங்கிணைத்து  மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்