வானத்தில் கேட்ட பயங்கர வெடி சத்தம்.. புகை மூட்டம்! – ஈரோட்டில் அதிர்ச்சி!
வியாழன், 16 ஜூன் 2022 (16:15 IST)
ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வானத்தில் பயங்கர வெடி சத்தத்துடன் புகையும் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை மக்கள் வழக்கம்போல அவரவர் பணிகளில் இருந்த நிலையில் திடீரென பயங்கரமான வெடிசத்தம் கேட்டுள்ளது.
வெடிசத்தத்தை தொடர்ந்து வீட்டின் கூரைகள் வேகமாக அதிர்ந்ததால் பதறிய மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் வானிலை வட்ட வடிவிலான புகை மூட்டமும் ஏற்பட்டதை மக்கள் வியப்புடன் பார்த்துள்ளனர்.
இந்த வெடி சத்தம் மற்றும் புகை வட்டம் அவ்வழியாக சூப்பர்சோனிக் ரக விமானம் பறந்ததினால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.