வட மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா... தமிழகத்தில் கவனம் தேவை!

சனி, 16 ஏப்ரல் 2022 (08:24 IST)
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், வட மாநிலங்களில் சில இடங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. 

 
உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான ”எக்ஸ்இ” என்ற தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது.
 
இந்நிலையில் சுகாதார செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இது குறித்து மக்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், வட மாநிலங்களில் சில இடங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
 
டெல்லியில் நாள் ஒன்றுக்கு 300 என கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெயில் காலமும் வந்துள்ளதால் பொதுமக்கள் அதிக நேரம் வெளியே நடமாடுவதை குறைக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். 
 
கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. நிபுணர்கள் பலர் கொரோனா குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்