அரசு பேருந்துகளில் தடுப்பு கம்பிகள் பொருத்தம்..! எதற்காக தெரியுமா.?

Senthil Velan

வெள்ளி, 7 ஜூன் 2024 (15:34 IST)
இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதைத் தடுக்கும் வகையில் 1,315 பேருந்துகளின் கீழ் இரு புற பக்கவாட்டிலும் தடுப்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "பேருந்து சக்கரங்களுக்கு இடையே விபத்து தடுப்பு கம்பிகளை அமைப்பதன் மூலம் மாநகர பேருந்துகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறோம். 
 
இந்த நடவடிக்கையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம். இரு சக்கர வாகன ஓட்டிகள் பேருந்தை முந்திச் செல்லும் போதோ, அல்லது எதிர்பாரா நேரங்களிலோ யாரும் பேருந்துக்கு அடியில் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இதற்காக 2212 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல்கட்டமாக 600 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டத்தில் 715 பேருந்துகளிலும் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ALSO READ: தேர்தல் தோல்வி எதிரொலி.! நிர்வாகிகளுடன் இபிஎஸ் நாளை ஆலோசனை..!!
 
பாதுகாப்பே எங்களது முதன்மை குறிக்கோள். அனைவருக்கும் பாதுகாப்பான சென்னை சாலைகள் என்ற அடிப்படையில் இது போன்ற ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்