மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை

ஞாயிறு, 12 ஜூன் 2016 (14:54 IST)
இந்திய அளவில், 47 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு இந்திய சுகாதார அமைச்சரகம் தடைவிதித்துள்ளது.
 

 
அகில இந்திய அளவில், 83 புதிய கல்லூரி விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. மேலும்அ, 47 மருத்துவக் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டுக்கான  கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது.
 
மருத்துவ கல்லூரிகள் மருத்துவக் கவுன்சிலின் 1956 ஆம்  ஆண்டு சட்டத்தின்படி மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்