மூன்று ரூபாய் பேலன்ஸ் வைத்திருந்த எஸ்.ஐ: வங்கி அதிகாரி கலாய்த்ததால் பரபரப்பு

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (06:32 IST)
சென்னையில் உள்ள ஒரு வங்கியில் போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் தனக்கு செக் புக் வேண்டும் என்று விண்ணப்பம் அளித்தார். அப்போது அவரது வங்கிக்கணக்கை ஆய்வு செய்த வங்கி அதிகாரி, அவருடைய வங்கி கணக்கில் வெறும் ரூ.3 மட்டுமே இருந்ததை பார்த்து செக் புக் கொடுக்க மறுத்துள்ளார்.



 
 
அப்போது அந்த எஸ்.ஐ. நான் என்னுடைய அக்கவுண்டில் ரூ.503 வைத்திருந்தேன், எப்படி ரூ.3 இருக்கும் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வங்கி அதிகாரி,  உங்களது கணக்கில் ரூபாய் 503 மட்டுமே இருந்த நிலையில் அந்த கணக்கு ஹோல்டு செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்தார்.
 
இதுகுறித்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது, வங்கி அதிகாரி உங்கள் இஷ்டம் போல் கார்டை தேய்த்து கொண்டிருந்தால் பேலன்ஸ் எப்படி இருக்கும் என்று கலாய்த்ததால் டென்ஷன் ஆன அந்த எஸ்.ஐ. வங்கி மேனேஜரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்