சென்னையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

புதன், 6 ஜூலை 2016 (08:19 IST)
சென்னையில் பெரம்பூரில் குப்பைத்தொட்டி ஒன்றில் பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பெரம்பூர் தில்லை நகரில் 6-வது தெருவில் குப்பை தொட்டி ஒன்றில் பிறந்து ஒரே ஒரு நாளான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் அந்த குழந்தை கிடந்தது. இதனால் இந்த குழந்தை கள்ளத் தொடர்பால் பிறந்திருக்கலாம் எனவும் அதனால் கல் நெஞ்சம் கொண்ட அந்த பெண், குழந்தையை இப்படி தூக்கி வீசிவிட்டு போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
பச்சிளம் குழந்தை குப்பைத்தொட்டியில் கிடந்ததை பார்த்த ஒருவர் காவல்துறைக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பால் குழந்தை பிறந்ததால் குப்பை தொட்டியில் வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்