பெப்சி என நினைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை!

சனி, 19 நவம்பர் 2016 (15:10 IST)
கடலூர் மாவட்டத்தில் 2 வயது குழந்தை ஒன்றை பெப்சி பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை பெப்சி என நினைத்து குடித்துள்ளது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
ஒரு தம்பதியினர் தாங்கள் வாங்கும் குளிர்பானம் தீர்ந்தவுடன் அதில் மண்ணெண்ணை, எறும்பு பொடி போன்றவற்றை வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதே போல பெப்சி குளிர்பான பாட்டில் ஒன்றைல் அவர்கள் மண்ணெண்ணையை நிரப்பி வைத்திருந்தனர்.
 
இந்நிலையில் அவர்களது 2 வயது குழந்தை அதில் இருப்பது பெப்சி தான் என நினைத்து மண்ணெண்ணையை குடித்துள்ளது. இதனையடுத்து குழந்தை திடெரென மயங்கி விழுந்துள்ளது. அதன் அருகில் மண்ணெண்ணை பாட்டில் கிடந்ததை பார்த்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
 
குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என கூறியுள்ளனர். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் குழந்தை உயிர் பிழைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்