பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (13:10 IST)
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
சுமார் 1500 காவலர்கள் கோவையில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
 
கோவை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.
 
நெல்லை, தூத்துக்குடியில் ரயில் நிலையங்கள், கோவில்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடம், அரசு நிறுவனங்கள் என அனைத்து இடங்களில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் அமர்த்தப்பட்டுள்ளனர்.
 
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்