ரஜினி கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னமா? பரபரப்பு தகவல்

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (07:45 IST)
ரஜினி கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னமா? பரபரப்பு தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் ரஜினி தரப்பிலிருந்து ’மக்கள் சேவை கட்சி’ என்ற கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
கடந்த 1995ஆம் படத்தில் பாட்ஷா என்ற சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்த் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார் என்பது அந்த சின்னமே அவருக்கு தற்போது கட்சியின் சின்னமாக கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தேர்தல் ஆணையத்தின் இந்த தகவலை அடுத்து ரஜினி கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்று வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது கட்சிக்கு ஆட்டோ சின்னம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சின்னம் மிக எளிதில் மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்