பிரதமர் பதவியையும் தனியாருக்கு விற்கலாமே? ஐடியா கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் கைது!

வியாழன், 2 செப்டம்பர் 2021 (20:42 IST)
பிரதமர் பதவியையும் தனியாருக்கு விற்கலாமே?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தும் குத்தகைக்கு விடும் வந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பல எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்/ தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூட சட்டமன்றத்தில் இது குறித்து காரசாரமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பிரதமர் பதவியையும் தனியாருக்கு விற்று விடலாமா என்று கூறியதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் 
 
பிரதமர் பதவியை மட்டும் என்று இராணுவம், நீதித்துறை, விண்வெளி, ஜனாதிபதி பதவியையும் தனியாருக்கு விற்றுவிடலாமே, தனியாருக்கு விற்பதற்கு நீங்கள் ஏன் ஆட்சி செய்கிறீர்கள் என்று போஸ்டர் ஒன்றை ஆட்டோவில் பின்னால் விட்டிருந்தார் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்