ஆகஸ்ட் 31ம் தேதி வரை வருமான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

சனி, 22 ஆகஸ்ட் 2015 (04:40 IST)
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
மாத ஊதியம் பெறுவர்கள், தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ள 80 வயதுக்கு உட்பட்டவர்களும், ரீபண்ட் கோருபவர்களும் ஆன்லைனில் வருமான வரி கணக்கு ரிட்டன் தாக்கல் செய்யலாம்.
 
ஆன்லைன் மூலமாகவோ அல்லது படிவத்திலோ வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள் ஆலோசகர்களின் உதவியை நாடலாம்.
 
இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில், வருமான வரி அலுவலகங்கள் அமைந்துள்ள ஆயக்கர் பவன் வளாகத்தில் ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
சென்னை பகுதி அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவன் வளாகத்திலும், தாம்பரம் பகுதி அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் தாம்பரம் ஆயக்கர் சேவை கேந்திராவிலும் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என கூறப்படுள்ளது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்