சட்டசபை கதவுகளை மூடிவிட்டு தான் இன்று வாக்கெடுப்பு நடக்கும்!

சனி, 18 பிப்ரவரி 2017 (09:53 IST)
29 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர்.


 
 
ஆனால் இந்த வாக்கெடுப்பு ரகசியமாக இல்லாமல் தலைகளை எண்ணும் வாக்கெடுப்பாகத்தான் இருக்கும் என தகவல்கள் வருகின்றன. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அதனை வரவேற்போம் என எதிர்க்கட்சி திமுகவும் கூறியுள்ளது.
 
தமிழகமே எதிர்பார்க்கும் இந்த சிறப்பு சட்டசபை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்து பேசுவார். பின்னர் சட்டசபை கதவுகள் மூடப்படும். அதன் பின்னர் தான் வாக்கெடுப்பு நடைபெறும்.
 
சட்டசபை கதவுகள் மூடப்பட்ட பின்னர் பின்னர் 6 பிரிவாக எம்எல்ஏக்களிடம் வாக்கெடுப்பு நடைபெறும். ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என பிரித்து வாக்கெடுப்பு நடைபெறும். காலை 11.30 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் சபாநாயகர் அன்றே முடிவுகளை அறிவிப்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்