ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் மரணம் !

புதன், 15 மே 2019 (16:30 IST)
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று  இந்தியாவுக்கும்,தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவரான சென்னை வீரர் ஒருவர் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஷெனாய் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். நீச்சல் வீரரான இவர் 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றவர். தற்போது அமெரிக்காவில் பணியாற்றிவரும் இவர் சில நாட்களுக்கு முன் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அரும்பாக்கம் வழியாக வரும்போது லாரி ஒன்றை முந்தி செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

பின்னால் வேகமாக வந்த லாரியால் உடனடியாக பிரேக் பிடிக்க முடியாமல் பாலகிருஷ்ணன் மீது ஏறியது. பலத்த காயமுற்ற பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இப்போது கோடைகால விடுமுறைக்கு வந்தவர் திடீரென விபத்தில் இறந்தது அவரது உறவினர்களை தீராத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்