ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை : தீபா, மாதவனுக்கு சம்மன்

செவ்வாய், 5 டிசம்பர் 2017 (10:11 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி, இது தொடர்பாக 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.


 
இதுபற்றி விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஏற்கெனவே திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன், ஜெயலலிதா சிகிச்சையின் போது தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவக்குழுவில் இருந்த மருத்துவர்களான நாராயணபாபு, விமலா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார். 
 
அந்நிலையில், ஜெ.வின் மரணம் தொடர்பாக 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 27 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
 
இதில் தீபா, மாதவன் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில், மாதவன் இன்று நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை கூறுவார் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்