வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊனமடைந்த ஆமைக்கு செயற்கை கால்

செவ்வாய், 14 ஜூன் 2016 (05:22 IST)
சென்னை வண்டலுர் உயிரியல் பூங்காவில் உள்ள ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்கு சக்கரக் கால்கள் பொருத்தப்பட்டன.


 

 
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நட்சத்திர ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதே பூங்காவில் உள்ள பராமரிக்கப்பட்டு கீரிப்ப்பிள்ளைகள் நட்சத்திர ஆமைகளை கடித்து காயப்படுத்தி உள்ளன. அதில் காயமைந்த ஆமைகளில் ஒரு பெண் ஆமையின் முன்னங்கால் நடக்க முடியாமல் ஊனமானது.
 
இதனால், அந்த நட்சத்திர ஆமையால் நடமாடவும் உணவைத் தேடிச் செல்லவும் இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, இதனை பூங்கா கால்நடை மருத்துவர் குழு சிறப்பு ஏற்பாட்டினை செய்தது.
அதன்படி இரண்டு சக்கரங்கள் முனைகளில் பொருத்தப்பட்ட கம்பி ஒன்று உறுத்தல் தராத எப்பாக்சி கலவை கொண்டு நட்சத்திர ஆமையின் அடிப்புற ஓட்டின்மீது ஒட்டப்பட்டது.
 
இப்போது, இந்தச் சக்கரங்கள் உதவியுடன் நட்சத்திர ஆமை வழக்கத்தைவிட வேகமாகத் தான் விரும்பும் இடத்திற்குச் சென்று வரவும், உணவைத் தேடிச் செல்லவும் முடிகிறது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்