சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஜூன் 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜூன் 20ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வும், ஜூலை 18ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படுகிறது.