ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கும் போது காய்ச்சல் இல்லை: அறிக்கை அம்பலம்

செவ்வாய், 7 மார்ச் 2017 (13:34 IST)
ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு ஆகிய காரணங்களால் அனுமதிக்கப்பட்டார் என அப்பல்லோ சார்பில் வெளியான அறிக்கை பொய் என தெரியவந்துள்ளது.


 

 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு காய்ச்சல் மட்டும்தான் என அப்பல்லோ மருத்துவ அறிக்கை வெளியிட்டது. ஆனால் தற்போது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு காய்ச்சல் இல்லை, வழக்கமான உனவுகளை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பட்டு இருந்தார் என தெரிவித்து இருந்தது.
 
இந்த அறிக்கை செப்டம்பர் 23ஆம் தேதி வெளியானது. தற்போது இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீர்ச்சத்து குறைபாடும், காய்ச்சலும் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு எப்படி நோய் தொற்று ஏற்பட்டது. முன்பின் முறனான அறிக்கைகளை வெளியிட்டதன் மூலம் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை குறித்த சந்தேகத்திற்கு வழி அமைத்து கொடுத்துள்ளது.
 
இந்நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்த மொத்த அறிக்கையையும் வெளியிட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் மயக்க நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இல்லை எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் மயக்க நிலை அடைந்ததற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.
 
இந்த இடத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றிய முதல் சந்தேகம் எழுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்