முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை-இபிஎஸ் கண்டனம்

Sinoj

புதன், 28 பிப்ரவரி 2024 (18:58 IST)
பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்ட்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-21  சட்டமன்ற உறுப்பினராக சத்யா பன்னீர்செல்வம் இருந்து வந்தார். 
 
இந்நிலையில் பண்ருட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான இடம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
 
2011 16-ஆம் ஆண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவராக இருந்த பொழுது டெண்டர் விடுவதில் 20 லட்சம் பணமோசடி ஈடுபட்டதாக  கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து தற்பொழுது இது தொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து முன்னால் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது: 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்