கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான போலீசார் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 15 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தரகம்பட்டி துணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தங்கமணி ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.