10,000 முறை கேட்டாலும் ஒரே பதில்தான்.. செல்லூர் ராஜு குறித்து அண்ணாமலை பேட்டி

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (09:46 IST)
10,000 முறை கேட்டாலும் செல்லூர் ராஜு குறித்து நான் சொன்ன கருத்து சொன்னது தான் அதிலிருந்து மாற மாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்றும் நாங்கள் சிறிய பதவியிலிருந்து படிப்படியாக முன்னேறிய அமைச்சர் பதவி வரை வந்திருக்கின்றோம் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்திருந்தார். 
 
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை ’செல்லூர் ராஜு போன்ற அரசியல் விஞ்ஞானிகளுக்கு எல்லாம் பதில் கூறி நான் என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள போவதில்லை என்று கூறியிருந்தார். 
 
இருவருடைய பேச்சில் கூட்டணியை பிளவுசெய்ய வைக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் செல்லூர் ராஜு குறித்து கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றும்  அவர் குறித்து நான் சொன்ன கருத்தில் இருந்து மாற மாட்டேன் என்றும் 10,000 முறை கேட்டாலும் ஒரே பதில் தான் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்