பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை. கல்வி மட்டுமல்ல.... கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தர வேண்டியது தான் ஆசிரியரின் பணி. அதைத் தான் ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல; இது தவறான முன்னுதாரணமாகிவிடும்!
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவ, மாணவியரும், ஊர்மக்களும் சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர் என்பதிலிருந்தே உண்மை நிலை என்ன? என்பதை உணர முடியும். தவறுகள் திருத்தப்பட வேண்டும்... தொடரக் கூடாது!