அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றால் பாஜக வுடன் கூட்டணி: ராமதாஸ்

புதன், 7 அக்டோபர் 2015 (07:52 IST)
முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணியை ஏற்றால் பாஜக வுடன் கூட்டணி அமைப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு, அதைத் தொடங்கிவைத்தார்.
 
பின்னர், பாஜகனதா கூட்டணியில் பாமக நீடிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ராமதாஸ் பதில் கூறுகையில், "பாமக வின் முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதை ஏற்றால் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம்" என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்