சொன்ன நம்மளே செய்யாம இருக்கலாமா? – திமுகவினருக்கு அன்பில் மகேஷ் அறிவுரை!

ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (10:01 IST)
திமுகவினர் விழாக்களில் பேனர் வைப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் திமுகவினருக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகள் முன்னதாக சென்னையில் அரசியல் கட்சி பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பேனர் கலாச்சாரத்தை நிறுத்தகோரி திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன், திமுக நிகழ்ச்சிகளில் இனி பேனர் வைக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆனால் சமீப காலமாக திமுக விழாக்களில் மீண்டும் பேனர் கலாச்சாரம் தலை தூக்கியிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து திமுகவினருக்கு அறிவுரை வழங்கியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் ”கட் அவுட் பேனர்களை வைக்க கூடாது என நீதிமன்றத்தை நாடியதே நம் திமுக என்பதை மறந்து விட கூடாது. ஆளும் கட்சி என்பதால் விதிமுறைகளை பின்பற்ற கூடாது என்பதில்லை” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்