ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு, பிரச்சார பேச்சாளராக வலம் வந்தவர் நடிகர் ஆனந்தராஜ். ஆனால், ஜெ. மறைந்த பின், அவரின் தோழி சசிகலாவின் தலைமையை ஏற்க பிடிக்காமல் அதிமுகவிலிருந்து விலகினார். அதன்பின், முக்கிய சம்பவங்கள் நடைபெறும்போது கருத்துக்கள் தெரிவித்து வந்தார்.
ஜெ.வின் மர்ம மரணத்தை பற்றிய உண்மையான அக்கறை இருந்திருந்தால் இதை முன்பே அறிவித்திருக்க வேண்டும். இது போன்ற விசாரணைக் கமிஷனால் இதுவரை எந்த வழக்கும் முடிவிற்கு வந்ததில்லை. மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. அவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தால் மட்டுமே இந்த விசாரணைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்” என அவர் கூறினார்.