தனி சின்னம் கிடைக்கும் வரை போட்டியில்லை! – பின்வாங்கிய தினகரன்!?

சனி, 21 செப்டம்பர் 2019 (13:32 IST)
தமிழக சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தினகரனின் அ.ம.மு.க இதில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் தினகரன்.

கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்று தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தாலும், அதற்கு பிறகான மக்களவை தொகுதி உள்ளிட்டவற்றில் பலமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் அ.ம.மு.க கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல்களால் பலர் கட்சியை விட்டு நீங்கி வேறு பெரிய கட்சிகளில் சேர்ந்து கொண்டுள்ளனர்.

தினகரனின் உறவினர் மன்னார்குடி திவாகரனே தினகரனுக்கு ஆதரவாக இல்லை. இந்நிலையில் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் மட்டுமே தனது கட்சியை மீண்டும் கட்டமைக்க முடியும். இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து பேசிய டிடிவி தினகரன் “தனி சின்னம் கிடைக்கும் வரை போட்டியிடப் போவதில்லை” என்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு சின்னம் வழங்கப்படுவதால் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும், வெற்றி பெறுவதிலும் சிரமங்கள் ஏற்படுவதால், மாநில கட்சிகளை போலவே நிலையான சின்னம் பெற்ற பிறகே போட்டியிடுவது என அமமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம் கட்சிக்குள் நடந்துவரும் உள்பூசல்களை சரிசெய்யாமல் தேர்தலுக்கு செல்வது சரியாக இருக்காது என்பதாலேயே தினகரன் தற்காலிகமாக பின்வாங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்