பழனி கோயிலுக்கு பேட்டரி காரை நன்கொடையாக கொடுத்த அமெரிக்க பக்தர்.. வைரல் புகைப்படம்..!

Mahendran

வியாழன், 25 ஏப்ரல் 2024 (13:35 IST)
பழனி கோயிலுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை நன்கொடையாக வழங்கிய நிலையில் இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
பழனி மலை கிரிவீதியில் பக்தர்கள் எளிதாக செல்வதற்கு இலவசமாக பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்றும், இதன் காரணமாக பழனி கோவிலுக்கு செல்லும்  முதியவர்கள், குழந்தைகள் எளிதாக பயணம் வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்நிலையில், அமெரிக்கவில் பணிபுரியும் முருக பக்தர் அகிலன் ரவிச்சந்திரன் என்பவர் தனது சார்பில் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனம் கொடுத்துள்ளார். இந்த பேட்டரி வாகனம் உடனே பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது
 
பழனி கோயிலுக்கு தொடர்ச்சியாக நன்கொடை அளித்து வருவதாகவும் முதியவர்கள், குழந்தைகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பேட்டரி கார் வாங்கி கொடுத்ததாகவும் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்