வங்க கடலில் உருவாகிறதா ஆம்பன் புயல்?- தமிழகத்திற்கு ஆபத்து இல்லை!

வெள்ளி, 15 மே 2020 (13:35 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் சில நாட்களுக்கு முன்பாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததை தொடர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் என முன்னரே பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்