ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு..!

Siva

வியாழன், 10 அக்டோபர் 2024 (08:13 IST)
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று காலமான நிலையில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதி சடங்கு நடத்தப்படும் என்றும் ரத்தன் தாத்தாவின் உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரத்தன் தாத்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் அவரது உடல் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மகாராஷ்டிரா மாநில அரசு செய்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் இந்திய தொழில் துறையின் உண்மையான டைட்டன், பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கம் என்று தெரிவித்துள்ளார்

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்