ஜெயலலிதா, கருணாநிதி இல்லாதாதால் அனைத்து கட்சிகளும் புதிய கட்சிகள்தான்: தினகரன்

வெள்ளி, 11 ஜனவரி 2019 (08:52 IST)
தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளான அதிமுக, மற்றும் திமுகவுக்கு கடந்த பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் சராசரியாக இருந்தது. ஆனால் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவிற்கு பின் இந்த வாக்கு சதவீதம் அப்படியே இருக்கும் என சொல்ல முடியாது என்றும், ஒரு தேர்தலை இந்த இரு கட்சிகளும் சந்தித்த பின்னரே வாக்கு சதவீதங்கள் குறித்து தெரிய வரும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் இல்லாத நிலையில் அதிமுக மற்றும் திமுகவுக்கு புதிய நிர்வாகிகள் உள்ளதால் அனைத்து கட்சிகளும் புதிய கட்சிகள்தான் என தெரிவித்தார்.

மேலும் தோல்வி பயத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் தம்மை குற்றம்சாட்டி வருவதாகவும், அவர் ஒரு செல்லாத காசு எனவும் டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்