தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இது சம்மந்தமாக மனித உரிமை ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆனால் அப்போதைய தமிழக அரசு அளித்த அறிக்கைக்குப் பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.