ஆனால் அழகிரி தரப்பிலும் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. அவை, அப்பா இருக்கும் வரை அவர்தான் தலைவர். தனக்கு தென் மண்டல பொறுப்பாளர் பதவி வேண்டும், வேறு எந்த பதவியும் வேண்டாம். தனது ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் வேண்டும். இவை தான் அழகிரி தரப்பில் வைக்கப்பட்ட முக்கியமான நிபந்தனைகள்.
இதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அழகிரியின் நிபந்தனைகளுக்கு கருணாநிதி அஞ்சினாலும், ஸ்டாலின் கூலாக தான் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த பொறுப்புகள் கொடுத்தாலும் தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் ஸ்டாலின்.