அஜித் ஓட்டு போட்டது தேர்தல் விதிமீறல்!.. அதிகாரிகள் செய்தது சரியா?..

வெள்ளி, 24 ஏப்ரல் 2026 (16:57 IST)
பல வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு போட்டி நடிகராக வலம் வந்தவர் அஜித்குமார். இருவருமே சமகாலத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான். இவர்களின் பல திரைப்படங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டது. அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இப்போதும் டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் மோதிக் கொள்கிறார்கள்.. ஒருவரை ஒருவர் ட்ரோல் செய்து கொள்கிறார்கள்..

அதேநேரம் அஜித், விஜய் சந்திக்கும்போது நல்ல அன்புடன், மரியாதையுடன் பழகி வருகிறார்கள். இந்நிலையில்தான், நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காகவே பெல்ஜியத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து நேற்று காலை திருவான்மியூரில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார் அஜித். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் அஜித் தனது வாக்குச்சாவடிக்கு 6.45 மணிக்கே வந்துவிட்டார்..

அஜித் வந்துவிட்டதால் தேர்தல் அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்துவிட்டனர்.  6:55 மணிக்கு அஜித் வாக்களித்து விட்டார். இதனால்தான் நேற்று பல தொலைக்காட்சிகளும் ‘தமிழ்நாட்டில் முதல் ஆளாக வாக்களித்த அஜித்’ என தொடர்ந்து செய்தி ஒளிபரப்பு வந்தார்கள்.

ஆனால் இது தேர்தல் விதிமீறல் என புகார் ழுந்திருக்கிறது. ஏனெனில் தேர்தல் ஆணைய விதிப்படி காலை 7 மணிக்குதான் வாக்குப்பதிவு துவங்க வேண்டும். அஜித்துக்காக 5 நிமிடங்கள் முன்பே எப்படி அவரை வாக்களிக்க அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை. அடுத்து, வாக்களித்த எல்லோருக்கும் இடது கை ஆள்காட்டி விரலில்தான் மை இட்டார்கள். ஆனால் அஜித்துக்கு வலது கை விரலில் மையிட்டார்கள். அந்த விரலை அவர் செய்தியாளர்களிடமும் காட்டி போஸ் கொடுத்தார். இதுவும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்